'டிராகன்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய திரைப்பட தணிக்கை குழு.

'டிராகன்' படம் வரும் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கின்றது.

'டிராகன்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய திரைப்பட தணிக்கை குழு.

பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று, தொடர்ந்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' மற்றும் 'டிராகன்' படங்களில் நடித்துள்ளார்.

'டிராகன்' படத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் கயடு 

லோஹர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, மேலும் இதன் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன. இந்நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

'டிராகன்' படம் வரும் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow